Page Loader
இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட் 
சிம்பு-சுதா கொங்கரா இணைவதாக இருந்த திரைப்படம் கைவிடப்பட்டது.

இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட் 

எழுதியவர் Srinath r
Nov 08, 2023
02:25 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வருடத்தில் தொடங்க இருந்த நடிகர் சிலம்பரசனின் எஸ்டிஆர்48 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. மேலும் படம் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என வெளியாகி உள்ள அப்டேட்டால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். நீண்ட காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் சுணக்கம் காட்டி வந்த சிலம்பரசன், வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்திற்கு பின் கம்பேக் கொடுத்தார். அதன்பின்னர், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய, வெந்து தணிந்தது காடு திரைப்படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. பின்னர் பத்து தல திரைப்படமும் சிறப்பாக அமைய சிம்புவுக்கு ஹேட்ரிக் வெற்றி கிடைத்தது. இதனை அடுத்து தனது 48வது படத்திற்காக, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் இணைவதாக கூறப்பட்டது.

2nd card

கைவிடப்பட்ட சிம்பு-சுதா கொங்கரா திரைப்படம்

கமலின், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், எஸ்டிஆர்48 திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக படத்தின் படப்பிடிப்பு, அடுத்த வருடம் தொடங்கும் என்றும், படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மேலும், கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா, சிம்புவை இயக்குவதாக தகவல் வெளியானது. இப்படம் பேச்சு வார்த்தைகளை கடந்து அடுத்த நிலைக்கு நகராததால், இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.