
டிசம்பர் மாதத்தில் திருமணத்திற்கு தயாராகும் பிரபல திரை நட்சத்திரங்கள்!
செய்தி முன்னோட்டம்
இந்த 2024 ஆண்டு பலரும் வாழ்க்கையில் திருப்புமுனையை தந்த வருடம் எனக்கூறலாம்.
குறிப்பாக திரையுலகினருக்கு! சிலருக்கு மணமுறிவுகள் ஏற்பட்டிருந்தாலும், பலருக்கு இந்த ஆண்டு காதல் கைகூடியது, பல ஆண்டுகள் காதலித்த ஜோடிகள் திருமணத்தில் இணைந்தது.
இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வரும் டிசம்பர் 2024இல் பல திரை நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணைய தயாராகி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் முதல் காளிதாஸ் ஜெயராம் வரை பல நட்சத்திரங்கள் அடுத்த மாதத்தில் திருமணம் செய்யவுள்ளனர்.
இந்த நட்சத்திர திருமணங்கள் குறித்து ஒரு பார்வை:
NYKE
கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணம்
நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களின் திருமணம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலரும் இது குறித்து பேசிவந்த நிலையில், இன்று அவரது சமூக வலைத்தளத்தில் அன்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு '15 வருடங்களாக...' என கேப்ஷன் இட்டுள்ளார்.
இதன் மூலம் முதன்முறையாக அவர் காதலை பொதுவெளியில் அறிவித்துள்ளார்.
ஆண்டனி துபாயை சேர்ந்த தொழிலதிபர் என்றும், இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக நிலையான உறவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் கீர்த்திக்கும், ஆண்டனிக்கும் கோவாவில் டெஸ்டினேஷன் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
காளிதாஸ்
காளிதாஸ் ஜெயராம்- தாரிணி காலிங்கராயர்
நடிகர் காளிதாஸ் ஜெயராம், மாடல் அழகியான தாரிணி காலிங்கராயர் என்பவரை வரும் டிசம்பர் 7ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். முன்னதாக இவர்கள் தங்கள் முதல் திருமண அழைப்பிதழை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைத்து குறிப்பிடதக்கது.
காளிதாஸ் ஜெயராம் கடைசியாக 'ராயன்' படத்தில் தனுஷ் உடன் நடித்திருந்தார்.
இவர்களின் திருமண நிகழ்வில் குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாக சைதன்யா
நாக சைதன்யா - ஷோபிதா திருமணம்
நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சமீபத்தில் வைரலான திருமண அழைப்பிதழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாக சைதன்யாவின் தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவ் நிறுவியதால், உணர்வுப்பூர்வமான இடமான ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமண விழா நடைபெறவுள்ளது.
அவரது குடும்ப பாரம்பரியத்திற்கு அஞ்சலி செலுத்தவும், தங்கள் மூதாதையரிடம் ஆசி பெறவும் தம்பதியினர் இடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி நாக சைதன்யாவின் ஹைதராபாத் இல்லத்தில் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
15 years and counting ♾️🧿
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 27, 2024
It has always been..
AntoNY x KEerthy ( Iykyk) 😁❤️ pic.twitter.com/eFDFUU4APz