ரூ.1,000 கோடி; எஸ்எஸ் ராஜமௌலி-மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் இவ்ளோவா!
எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தற்காலிகமாக எஸ்எஸ்எம்பி 29 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜனவரி 2025இல் தொடங்க உள்ளது. குல்டேவின் அறிக்கையின்படி, இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி படத்திற்கான சரியான இடங்களைத் தேடுகிறார். ஸ்கிரிப்ட் ரகசியமாக வைக்கபப்ட்டுள்ளது மற்றும் படத்திற்கு கருடா என்று பெயரிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், ஹைலைட்டாக, இந்த படம் ₹900-1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்த படம் உலகளாவிய மார்க்கெட்டைக் குறிவைத்து ஒரு சாகச திரைப்படமாக உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இரண்டு வருடங்கள் எழுதப்பட்ட திரைக்கதை
படத்தின் திரைக்கதையை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், இந்தப் படத்துக்கான கதையை உருவாக்க இரண்டு வருடங்கள் எடுத்ததாக விஜயேந்திர பிரசாத் தெரிவித்தார். இந்தியத் திரையுலகில் இதுவரை ஆராயப்படாத புதிய உலகத்திற்கு இப்படம் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என்றும் அவர் உறுதிபடுத்தினார். படத்தில் மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் இந்து புராணங்களில் இருந்து ஹனுமானால் ஈர்க்கப்பட்டதாக யூகங்கள் உள்ளன. எஸ்எஸ்எம்பி 29க்காக மகேஷ் பாபு ஒரு பெரிய உடல் மாற்றத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. அவரது சமீபத்திய நீண்ட முடி மற்றும் தாடி தோற்றம் நெட்டிசன்களை ஊகிக்க வைத்தது. மேலும் இப்படம் ஒரு காட்டில் சாகசப் படமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்கவுள்ளார்.