ஷாருக்கானின் பிறந்தநாளை 4 நாள் திருவிழாவாக கொண்டாட ரசிகர் மன்றம் திட்டம்
ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கலை போலவே, தங்களின் நட்சத்திர நாயகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவது சினிமா ரசிகனின் வழக்கம். அதிலும் குறிப்பாக, பாலிவுட் நட்சத்திரங்களின் பிறந்தநாளை, அவர்களின் ரசிகர்கள் கோலாகல திருவிழாவாக கொண்டாடுவார்கள். அந்த வழக்கத்தில், விரைவில், 'பாலிவுட் பாட்ஷா' என்றழைக்கப்படும் ஷாருக்கானின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஷாருக்கான் யுனிவர்ஸ் ரசிகர் மன்றம், SRK -வின் பிறந்தநாளை நான்கு நாட்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அக்டோபர் 30 தொடங்கி, நவம்பர் 2 (அவரது பிறந்தநாள்) வரை கொண்டாட்டங்கள் நீளவிருக்கிறது.
நற்பணி நிகழ்வுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன
ஷாருக்கான் யுனிவர்ஸ் ஃபேன் கிளப் என்பது உலகம் முழுவதுமுள்ள அவரின் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது எனக்கூறப்படுகிறது. அதன் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் 584.8K ஃபாலோவர்ஸ் உள்ளனர். அந்த தளத்தில் வெளியான அறிக்கையின் படி, இன்றிலிருந்தே, கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. இன்று, பழங்குடியின கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான சுகாதார பரிசோதனை பிரச்சாரம் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றில் துவங்கி, மும்பையின் புகழ்பெற்ற மராத்தா மந்திரில் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' தொடங்கி பார்ப்பது, ஆதரவற்ற வீடுகளிலும் ரேஷன் பொருட்களை விநியோகிப்பதும் பல நற்பணி திட்டங்கள் நடைபெறவுள்ளன. அதுமட்டுமின்றி, ஆதரவற்றோர் இல்லங்களில், தீபாவளி விளக்குகள் மற்றும் இனிப்புகள் போன்ற தேவையான பொருட்களை விநியோகித்தல், புற்றுநோய் நோயாளிகளைக்கு நன்கொடை வழங்குதல் ஆகியவையும் அடங்கும்.