Page Loader
'NTR 30' படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு வில்லன் ஆகிறாரா சியான் விக்ரம்?
'NTR 30' படத்தில் சீயான் விக்ரம்?

'NTR 30' படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு வில்லன் ஆகிறாரா சியான் விக்ரம்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2023
03:30 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு படவுலகில் முன்னணி நட்சத்திரமான, ஜூனியர் என்.டி.ஆர், RRR படம் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம். அவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை, கொரட்டால சிவா என்பவர் இயக்குகிறார். தற்காலிகமாக 'என்டிஆர்30' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை குறித்து எவ்வித அப்டேட்டும் வெளியாகாத நிலையில், புதிய செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதன்படி, 'என்டிஆர்30' படத்தில், ஜூனியர் என்.டி.ஆருக்கு வில்லனாக, 'சீயான்' விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இன்னும் விக்ரம் அதை குறித்து முடிவெடுக்கவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. நடிகர் விக்ரம், தற்போது, ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தில் பிஸியாக இருப்பதாகவும், வேறு எந்த படத்திலும் தற்போது வரை கமிட் ஆகவில்லை என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

ஜூனியர் என்டிஆருக்கு வில்லன் ஆகிறாரா விக்ரம்?