பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் தென்னிந்திய திரைப்படங்கள்
இந்தியா முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில், திரைப்படங்கள் விடுமுறையை முன்னிட்டே வெளியிடப்படுகிறது. விடுமுறை நாட்களில் வசூலை அள்ளிவிடலாம் என்பது தயாரிப்பாளர்களின் நோக்கம். அந்த வகையில், வரவிருக்கும் பொங்கல் திருநாள், இந்தியாவின் தென் பிராந்தியங்களில் ஒரு முக்கிய பண்டிகையாகும். எனவே ஒவ்வொரு ஆண்டும், இந்த சந்தர்ப்பத்தில் பல திரைப்படங்கள் வெளியிடப்படுவது ஆச்சரியமல்ல. இந்த ஆண்டும் பல தென்னிந்திய திரைப்படங்கள் இந்த நாளை ஒட்டி வெளியாகவுள்ளது. அவை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
மெர்ரி கிறிஸ்துமஸ்
மெர்ரி கிறிஸ்மஸ் அடுத்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதனை இயக்கி இருப்பவர் ஸ்ரீராம் ராகவன். இவர் ஏற்கனவே அந்தாதுன் (2018) என்ற மிகப்பெரும் வெற்றி படத்தினை இயக்கி உள்ளார். அந்த படத்தின் வெற்றி, அப்படத்தை பல மொழிகளில் மொழிபெயர்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம், இந்தி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இப்படத்தில், விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இரு ட்ரைலர்கள் வெளியானது- இந்தி மற்றும் தமிழ். அதில் ஹீரோவும் ஹீரோயினும் எடுக்கும் வெவ்வேறு முடிவுகளைக் கொண்டிருப்பதை காட்டியது. இது பிரெடெரிக் டார்டின் ஃபிரெஞ்சு நாவலான பேர்ட் இன் எ கேஜை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.
குண்டூர் காரம்
மகேஷ் பாபு தனது அடுத்த வெளியீடாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் குண்டூர் காரம் படத்திற்கு தயாராகி வருகிறார். இந்த ஆக்ஷன் திரைப்படம் மகேஷ் பாபுவின் இரண்டு தசாப்த கால வாழ்க்கையில், 28 வது திரைப்படமாகும். மேலும் இது ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை எஸ் ராதா கிருஷ்ணா, தனது ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கிறார். இதற்கு முன், மகேஷ் பாபுவின் கடைசி வெளியீடு சர்க்காரு வாரி பாட்டா (2022)
ஹனு-மன்
தேஜா சஜ்ஜாவின் ஹனு-மன் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. ஆவ் மற்றும் கல்கி படங்களுக்கு பெயர் பெற்ற பிரசாந்த் வர்மா இதனை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இயக்குனர் வர்மா மற்றும் தேஜாவின் தெலுங்கு படமான 'ஸோம்பி ரெட்டி'க்கு பிறகு இரண்டாவது கூட்டணியாகும். அமிர்தா ஐயர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய் ராய், சத்யா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
கேப்டன் மில்லர்
வாத்தி படத்திற்குப் பிறகு, தனுஷ் மீண்டும் தனது ரசிகர்களை கேப்டன் மில்லர் மூலம் சந்திக்க வருகிறார். இந்த திரைப்படம், ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், எட்வர்ட் சோனென்ப்ளிக் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது 1930கள் மற்றும் 1940களில் பிரிட்டிஷ் காலனித்துவ இந்தியாவின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் இன்று சன் டிவியில் ஒளிபரப்பாகிறது
அயலான்
சிவகார்த்திகேயனின் அறிவியல் ஃபேண்டஸி படமான அயலான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. இது பூமியில் வாழும் ஒரு குழுவுடன் நட்பு கொள்ளும் வரும் வேற்று கிரகவாசியை சுற்றி நகர்வதாக கூறப்படுகிறது. இவர்கள் கூட்டாக தங்கள் மறைமுக நோக்கங்களுடன், விஞ்ஞானிகளிடமிருந்து வேற்றுகிரகவாசியை பாதுகாக்கிறார்கள். சிவகார்த்திகேயன் கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ காமெடி-நாடகத் திரைப்படமான மாவீரனில் நடித்தார்.