நடிகர் சரத்பாபுவின் உடல், சென்னைக்கு கொண்டு வரப்பட்டது!
நடிகர் சரத்பாபு, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். மேலும் உடல்நிலை மோசமடைந்ததால் ஹைதராபாத் ஏஐஜி மருத்துவமனையில் செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் மிகவும் மோசமடைந்து நேற்று (மே 22) உயிரிழந்தார். அன்னாரது உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் உடல் தகனம், சென்னையிலேயே, இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.