அன்னையர் தின ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் சிறந்த அம்மா பாடல்கள்
இன்று அன்னையர் தினம். கோலிவுட் வரலாற்றில், 'அம்மா செண்டிமெண்ட்' இல்லாத பேமிலி படங்களே இல்லை எனலாம். தாய்க்கும், மகனுக்கும் இருக்கும் பிரியத்தை வெளிக்காட்ட கவிஞர்களும் போட்டிபோட்டு கொண்டு பல அழகிய பாடல்களை தந்துள்ளனர். இந்த நாளில், தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த 'அம்மா' பாடல்கள் சிலவற்றை பற்றி காண்போம். 'அம்மா வென்றழைக்காத', மன்னன்: ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் இடம்பெற்ற பாடலை, KJ .ஜேசுதாஸ் பாடியிருப்பார். 'நானாக நான் இல்லை', தூங்காதே தம்பி தூங்காதே: கமல்ஹாசன் நடிக்க, இளையராஜா மெட்டிசைக்க, SPBயின் அருமையான குரலில் ஒலிக்கும் எவெர்க்ரீன் பாடல் இது. 'காலையில் தினமும்', நியூ: SJ சூர்யாவும், தேவயானியும் நடித்த பாடல். AR ரஹ்மான் இசையமைப்பில் உருவான மெலடி பாடல்.
தமிழ் ஹீரோக்கள் பாடிய பிரபலமான 'அம்மா' பாடல்கள்
'ஆசப்பட்ட எல்லாத்தையும்', வியாபாரி: SJ சூர்யா நடித்த இந்த படம் சரியாக ஓடாவிட்டாலும், படத்தின் பாடல் ஹிட் அடித்தது. 'நீயே நீயே', M குமரன்: நதியாவும், ஜெயம் ரவியும் நிஜ அம்மா-மகனாகவே நடித்துள்ள திரைப்படம். 'பிரெண்ட்லி' அம்மாவாக நதியா நம்மை ஏங்க வைத்திருப்பார். 'ஆராரிராரோ', ராம்: ஜீவா, சரண்யா நடித்துள்ள திரைப்படம். யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவான மனதை வருடும் மெலடி பாடல் இது. 'அம்மா', வலிமை: அஜித் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில், அம்மா புகழ் பேசும் பாடல், சித் ஸ்ரீராமின் குரலில், ஹிட் ஆனது. 'அம்மா அம்மா', VIP : தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில், இந்த பாடலையும் அவரே எழுதி பாடியுள்ளார்.