
இன்னுமொரு நட்சத்திர ஜோடி: கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி திருமணம்
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும், பாலிவுட் நடிகை ஆதியாவிற்கும், நேற்று மாலை (ஜன 23), 4 மணிக்கு, திருமணம் நடைபெற்றது.
கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடந்த இந்த விழாவில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கலந்து கொண்டனர்.
மதியம் சுமார் 2 மணிக்கு, மாப்பிளை அழைப்பு ஊர்வலத்துடன், தொடங்கிய இந்தத் திருமண நிகழ்ச்சியில், மணமக்களின் நண்பர்கள் பங்குபெற்றனர்.
தென்னிந்திய பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வாழை இலையில், விருந்து பரிமாறப்பட்டது.
திருமண நிகழ்வில், கிரிக்கெட் வீரர்கள், வருண் ஆரோன் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விரைவில் மும்பையில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Instagram அஞ்சல்
மணமக்களாக ஆதியா ஷெட்டி மற்றும் ராகுல்
ட்விட்டர் அஞ்சல்
ஊடகவியலாளர்களுக்கு நன்றி கூறிய சுனில் ஷெட்டி
Ahan Shetty and Suniel Shetty thank the media and distribute sweets to the paparazzi.#AhanShetty #SunielShetty #Bollywood #ETimes pic.twitter.com/W1Xv1Jdzqc
— ETimes (@etimes) January 23, 2023