
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்- நடிகை ஆதியா ஷெட்டி திருமணம் இன்று மாலை, கண்டாலாவில் நடைபெறுகிறது
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான,ஆதியாவிற்கும், இன்று மாலை (ஜன 23), கண்டாலாவில் திருமணம் நடைபெற உள்ளது.
கண்டாலாவில் உள்ள, சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்.
12 -B, தர்பார் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர், ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி. இவரின் மகள் ஆதியாவும், நடிகை ஆவார். அவரும், முன்னணி கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுலும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இருவரும் இன்று (ஜன 23) திருமணம் செய்ய இருக்கிறார்கள்.
இவ்விருவருக்கும், திரை நட்சத்திரங்களும், சக விளையாட்டு வீரர்களும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்- நடிகை ஆதியா ஷெட்டி திருமணம்
Congratulations to my dear friends @SunielVShetty #ManaShetty for their daughter @theathiyashetty’s marriage to @klrahul. Here’s wishing the young couple a blissful married life. And, Anna, here’s a special shout-out to you on this auspicious occasion.
— Ajay Devgn (@ajaydevgn) January 23, 2023
❤️ Ajay pic.twitter.com/n2po9KfPdo