Page Loader
ப்ரோபோசல் டே 2023 : தமிழ் சினிமாவின் எவெர்க்ரீன் ப்ரோபோசல் காட்சிகள்

ப்ரோபோசல் டே 2023 : தமிழ் சினிமாவின் எவெர்க்ரீன் ப்ரோபோசல் காட்சிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 08, 2023
01:04 pm

செய்தி முன்னோட்டம்

காதலர் தின வாரத்தில், இரண்டாம் நாளான இன்று, ப்ரோபோசல் டே எனக்கொண்டாடப்படுகிறது. இந்த ப்ரோபோசல் டே, காதல் உறவில், ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கும் நாள் என்பதால், பலர் தங்கள் துணைக்கு மறக்க முடியாத நிகழ்வாக, ப்ரோபோசல் பிளான்களை தேர்வு செய்கின்றனர். அதேபோல, தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத எவெர்க்ரீன் ப்ரோபோசல் காட்சிகளின் தொகுப்பு உங்களுக்காக: மௌன ராகம்: இந்த படத்தில், கல்லூரி வளாகத்தில், அனைவர் முன்னிலையிலும், கதாநாயகன், தனது காதலை காதலியிடம் வெளிப்படுத்தும் விதம், இன்றும் ரசிக்கவைக்கும். அலைபாயுதே: இந்த படத்தில், ரயில்வே ஸ்டேஷனில், கதாநாயகன், காதலியிடம் தனது காதலை சொல்லும் விதம், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. வாரணம் ஆயிரம்: இந்த படத்தில் இடம்பெற்ற இரு வேறு ப்ரோபோசல் காட்சிகள் என்றும் எவெர்க்ரீன்.

தமிழ் சினிமா

காதலும் கவுதம் வாசுதேவ் மேனன் படங்களும்!

விண்ணைத்தாண்டி வருவாயா: பார்த்தவுடன் காதல் கொண்ட பெண்ணான ஜெஸ்ஸியிடம், குறிப்பால் தனது காதலை உணர்த்துவார் நாயகன் கார்த்திக். மெட்ராஸ்: இந்த படத்தில், தைரியமான பெண்ணான நாயகி, நாயகனிடம் ப்ரொபோஸ் செய்யும் விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. "நீதான் வேணும். கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்ற வசனம், இளசுகள் மத்தியில் பிரபலம். காக்க காக்க: GVM-ம், காதலும் பிரிக்க முடியாதது. இந்த படத்தில், மாயா கதாபாத்திரத்தில் ஜோதிகா, தனது காதலை அழகாக கதாநாயகனிடம் உணர்த்துவாள். படத்தின் வசனத்துடன், காட்சியும் காதல் பேசும். வேட்டையாடு விளையாடு: காதல் என்று வந்துவிட்டால், கமல் இல்லாமல் எப்படி? வேட்டையாடு விளையாடு படத்தில், கமலின் கதாபாத்திரம், கதாநாயிகிடம் தன் காதலை சொல்லும் விதம் ரசிக்க வைக்கும்.