
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல்
செய்தி முன்னோட்டம்
நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் ரவி மோகன் நடிக்கும் 'பராசக்தி' திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக சமீப நாட்களில் தகவல் வெளியானது. அப்படத்தின் தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸின் ஆகாஷ் பாஸ்கரனை அமலாக்கத்துறையினர் தேடி வருவதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் செய்தி வெளியானது. இதனால், பராசக்தி படத்தின் பணிகள் முடங்கும் எனவும், சிவகார்த்திகேயனை அமலாக்கத்துறையினர் விசாரிக்கவுள்ளதாகவும் கூட செய்தி வெளியானது. இந்த நிலையில் அப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா ஒரு பேட்டியில், பராசக்தி படத்திற்கு இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு தான் மிச்சம் இருப்பதாகவும், சிவகார்த்திகேயன், AR முருகதாஸின் 'மதராசி' படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch |"சிவகார்த்திகேயனுக்காக Waiting.." - 'பராசக்தி' அப்டேட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா!#SunNews | #Parasakthi | @Siva_Kartikeyan | @Sudha_Kongara pic.twitter.com/F4b2lkEfPC
— Sun News (@sunnewstamil) May 23, 2025