Page Loader
சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
இந்த படம் தீபாவளி அன்று வெளியாகிறது

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2024
09:42 am

செய்தி முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'. இந்த படம் வரும் அக்டோபர் 31, தீபாவளி அன்று வெளியாகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். இந்த நிலையில் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 'India's Most Fearless' என்ற புத்தகத்தின் அடிப்படையில் இப்படம் உருவானது என கூறப்படுகிறது. இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி. இப்படத்திற்கு இசையமைத்திருப்பது ஜி.வி.பிரகாஷ். 'அயலானின்' வெற்றிக்கு பிறகு வெளியாகவுள்ள இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

மேக்கிங் வீடியோ