சென்னையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை
செய்தி முன்னோட்டம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் ஒரு கொள்ளை சம்பவம் சென்ற வாரம் நடந்தேறிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு திரைபிரபலத்தின் வீட்டிலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில்தான், இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை அபிராமபுரத்தில், விஜய் யேசுதாஸின் வீடு உள்ளது. அந்த வீட்டில் இருந்த 60சவரன் நகைகளை காணவில்லை என, விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரும் தனது வீட்டில் இருக்கும் பணியாட்கள் மீது தான் சந்தேகம் என தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தர்ஷனா, சென்ற டிசம்பர் மாதம் நகைகளை செக் செய்து வீட்டின் லாக்கரில் வைத்ததாகவும், மீண்டும் பிப்ரவரி மாதம் அதை சரிபார்க்க சென்றபோது, அவற்றை காணவில்லை எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
விஜய் யேசுதாஸ் வீட்டில் கொள்ளை
விஜய் ஏசுதாஸ் வீட்டில் நகை கொள்ளை #VijayYesudas #JeweleryRobbery #JayaPlus pic.twitter.com/FFYArftotW
— Jaya Plus (@jayapluschannel) March 31, 2023