
VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சியின் போது ட்ரோன் தாக்கி பாடகர் பென்னி தயாள் காயம் அடைந்தார்
சென்னையில் உள்ள VIT பல்கலைக்கழக வளாகத்தில், நேற்று நடந்த கலைவிழா ஒன்றில் பங்கேற்றிருந்தார்.
மேடையில் அவர் பாடிக்கொண்டிருந்த போது, அந்த விழாவை படம்பிடிக்கும் ட்ரோன் ஒன்று தொழில்நுட்ப கோளாறால், அவரின் பின்னந்தலையில் மோதியது.
எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தின் வலி தாளாமல், பென்னி கீழே குனிந்து அமர்ந்து விட்டார். அந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து ஒரு விளக்க விடீயோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவேற்றியுள்ளார்.
அதில், "தயவுசெய்து அனைத்து கல்லூரிகள், நிறுவனங்கள், நிகழ்ச்சி அல்லது நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களும், ஒரு சான்றளிக்கப்பட்ட ட்ரோன் ஆபரேட்டரை தேர்வு செய்யுங்கள்," எனக்கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பென்னி தயாள் விளக்கம்
#BennyDayal wants artistes to be careful of drone cameras, here’s why!
— Pune Mirror (@ThePuneMirror) March 4, 2023
In a shocking event, #BennyDayal got hurt by a drone during one of his concerts in Chennai. Reportedly, the drone was capturing his mega show when it fell down and hit the ‘back of his head’. pic.twitter.com/2nbkUWK954
ட்விட்டர் அஞ்சல்
ட்ரோனால் தாக்கப்பட்ட பாடகர் பென்னி தயாள்
Video of singer #BennyDayal getting hit by a drone at the back of his head during a concert at VIT college, Chennai pic.twitter.com/fXydVzOjXZ
— Bollywood Buzz (@BollyTellyBuzz) March 4, 2023