சிம்பு வெளியிட்டிருந்த புதிய வீடியோ படத்திற்காக இல்லையாம்!
நடிகர் சிம்பு நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியிருந்தார். பண்டைய கால மாளிகையை எதிரிகள் சூழ்ந்தது போலவும், அந்த எதிரிகள் பிரெஞ்சு வீரர்கள் போன்ற உடையலங்காரத்துடன் குதிரைகளில் அமர்ந்திருந்தனர். அப்போது கோட்டை கதவுகளை திறந்துகொண்டு சிம்பு வருவதுபோல அமைந்திருந்தது அந்த வீடியோ. இதை பார்த்த சிலம்பரசனின் ரசிகர்கள் பலரும், இது அவர் தற்போது நடித்துவரும் 'STR 48' படத்திற்கான ப்ரோமோஷன் வீடியோவா என குழம்பிய நிலையில், அதற்கான விளக்கம் தற்போது கிடைத்துள்ளது. அந்த வீடியோ, காசா கிராண்ட் நிறுவனத்திற்காக சிம்பு நடித்துள்ள புதிய விளம்பர படமாம். பார்ப்பதற்கு கங்குவா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போலவே தோற்றமளித்த அந்த விளம்பர படம், அந்நிறுவனம் புதிதாக கட்டிவரும் ஒரு பிரமாண்டமான ப்ரொஜெக்ட்டிற்காகவாம்!