இலங்கை தமிழ் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள சிம்பு
கோலிவுட் நடிகர்களிலேயே, எலிஜிபிள் பேச்சிலர் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் சிம்பு. இடையில், உடல் எடை கூடியிருந்த சிம்பு, லாக் டவுனிற்கு பிறகு, ட்ரிம்மான சிம்புவாக மீண்டும் வந்தார். 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' என வெற்றி படங்களை தந்தார். இந்நிலையில், சிம்புவிற்கு பெண் தேடுவதாக செய்திகள் வந்தன. தொடர்ந்து, இலங்கை தமிழ் பெண் ஒருவரை மணந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின. தற்போது சிலம்பரசனின் PRO, அந்த செய்திகளை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை பெண்ணுடன் திருமணம் நிச்சயம் என வரும் தகவல் பொய் எனவும், இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனவும், சிம்பு திருமணம் குறித்து ஏதேனும் செய்திகள் இருப்பின், அவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.