NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா
    பொழுதுபோக்கு

    பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா

    பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா
    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 02, 2023, 10:22 pm 1 நிமிட வாசிப்பு
    பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா
    திருமணத்தில் இணைய போகும் மற்றுமொரு பாலிவுட் ஜோடி!

    கிரிக்கெட் வீரர் தோனியின் சுயசரிதை படமான 'MS தோனி' படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவரும், 'ஷேர்ஷா', 'மிஷன் மஜ்னு' போன்ற படத்தில் நடித்த சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இவர்கள், திருமணம் செய்யவிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து இருவர் தரப்பிலும் எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இல்லை. அவர்கள் திருமணம் குறித்த விவரங்களை யூக அடிப்படையில், பத்திரிகைகள் வெளியிட்ட வண்ணம் உள்ளது. அவற்றின் தொகுப்பு இதோ: சித்தார்த்- கியாரா ஜோடி, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரின் 'சூர்யகர்' என்ற நட்சத்திர விடுதியை தங்கள் திருமணத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களது திருமண நிகழ்ச்சிகள், சனிக்கிழமை (பிப்ரவரி 4) துவங்கி, அடுத்த திங்கட்கிழமை (பிப்ரவரி 6) வரை நடைபெறும்.

    அரச மாளிகையில் திருமண வைபவம்

    இந்த நட்சத்திர விடுதி, ஒரு பழங்காலஅரச மாளிகை ஆகும். இதில் ஒரு அறையின் வாடகை, கிட்டத்தட்ட ரூ. 60,000. இவர்கள் திருமண நிகழ்வுகள் அனைத்தும்- மெஹந்தி விழா முதல் ஹல்டி மற்றும் சங்கீத் வரை, இந்த பாலைவன கோட்டையில் தான் நிகழப்போகிறது. சங்கீத்தில் இசைக்கப்படும் பாடல்களின் தொகுப்பை, கியாரா, தானே தேர்ந்தெடுத்தார் எனவும், அதில் குறிப்பாக 'ஷெர்ஷா' பட பாடல் இடம் பெற வேண்டும் எனவும் கூறினாராம். காரணம், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் இருவரும் காதல் வயப்பட்டனர். திருமண வைபவத்தில், பாலிவுட்டின் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானில் திருமணம் முடிந்த பிறகு, இந்த ஜோடி மும்பையில் ஒரு பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    பாலிவுட்
    திருமணங்கள்

    சமீபத்திய

    சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் வீடியோ
    2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக டாம் லாதம் நியமனம் டி20 கிரிக்கெட்
    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருது
    2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வெளியானது: ஜடேஜாவுக்கு ஜாக்பாட்! கிரிக்கெட்

    பாலிவுட்

    பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது கோலிவுட்
    பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும், தமிழ் சினிமாவும்! கோலிவுட்
    பிரபல ஹிந்தி பட நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி வைரல் செய்தி
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை

    திருமணங்கள்

    முதலில் தாலி கட்டிவிட்டு, நிதானமாக கடன் கட்டலாம் - திருமணக் கடன் தொழில்நுட்பம்
    ஜப்பானில் பரவிவரும் வார இறுதி திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உறவுகள்
    மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா!! கிரிக்கெட்
    விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல் ஓடிடி

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023