Page Loader
'இனிமேல்' ரோல் ரிவர்ஸ்: லோகேஷ் பிறந்தநாளுக்காக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ
'Inimel Delulu is the New Solulu' இசை ஆல்பத்தின் போஸ்டர்

'இனிமேல்' ரோல் ரிவர்ஸ்: லோகேஷ் பிறந்தநாளுக்காக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Mar 19, 2024
12:23 pm

செய்தி முன்னோட்டம்

LCU என்று அழைக்கப்படும் லோகி யூனிவெர்சின் நாயகன் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. அவர் பிறந்தநாளுக்காக சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். அதன்படி, இதுவரை இயக்குனராக இருந்த லோகேஷ், நடிகராக மாறவுள்ளார் என்றும், ஹீரோவாக இருந்த நடிகர் கமல்ஹாசன், படலாசிரியராகவும், நடிகையாக இருந்த ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளதை அந்த வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ள இந்த புதிய இசை ஆல்பத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. முன்னதாக இந்த ப்ரொஜெக்ட்டின் அறிவிப்பு, 'Inimel Delulu is the New Solulu' என தலைப்பிட்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Inimel Delulu is the New Solulu!