
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அடுத்த பாகம் உருவாகிறதா?
செய்தி முன்னோட்டம்
கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோத்தை தரும் ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி, தற்போது தயாராகி வரும், இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து இந்தியன் 3 உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை துவங்கும் போது, இதை இரண்டு பாகமாக எடுக்கும் எண்ணம் இல்லையெனவும், 6 மணி நேர காட்சிகளை, எடிட்டிங் டேபிளில் கொண்டு வந்தபோது தான்,இயக்குனர் ஷங்கருக்கு இந்த எண்ணம் தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக தயாரிப்பாளர் தரப்பும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.
இதற்கென தனியாக ஷூட்டிங் செல்லப்போவதில்லை எனவும், இந்தியன் 2 படப்பிடிப்பின் போதே அடுத்த பாகத்தின் 80 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், விரைவில் மீதி காட்சிகளை ஷூட் செய்யப்போகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
விரைவில் இந்தியன் 3
#Indian2 & #Indian3 was almost confirmed now💥
— AmuthaBharathi (@CinemaWithAB) July 26, 2023
- Team is having 6 hours Footage & Indian2 climax will lead for Part-3🤝
- After completion of Part-2, 75% of the part-3 will be ready 🎬
- Both parts will release in a gap of 1 year span👌#KamalHaasan | #Shankar | #Anirudh pic.twitter.com/Jlp4iOnt0c