
ஜவான் திரைப்பட ட்ரைலர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் 'ஜவான்'.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 30) இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 'ஜவான்' திரைப்படத்தின் 'ப்ரீ-ரிலீஸ்' ஈவென்ட்டாக கருதப்படும் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு, படத்தின் நாயகன் ஷாருக்கான் வருகை தந்திருந்தார்.
ஒரு ஹிந்தி படத்திற்கு, சென்னையில் இசை வெளியீட்டு விழா நடப்பது இதுவே முதல்முறை ஆகும்.
ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளது அனிருத்.
ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியான நிலையில், நேற்று படத்தின் இசை ஆல்பத்தை வெளியிட்டனர் படக்குழுவினர்.
இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 7 திரைக்கு வரவுள்ளது
ட்விட்டர் அஞ்சல்
ஜவான் ட்ரைலர்
நீதி மற்றும் ஒரு ஜவான்
— Shah Rukh Khan (@iamsrk) August 31, 2023
பெண்கள் மற்றும் அவர்களின் பழிவாங்குதல்
ஒரு தாய் மற்றும் ஒரு மகன்
நிறைய மஜா தருணங்கள்
Ready ahhh?#JawanTrailer இப்போது வெளியாகி உள்ளது!
Needhi matrum oru Jawan
Pengal matrum avargalin Pazhivanguthal
Oru Thai matrum oru magan
Neraya maja tharunangal… pic.twitter.com/8oI5DrUwkr