
தனது மன்னத் வீட்டை விட்டு குடும்பத்தாருடன் வெளியேறிய ஷாருக்கான்; இதுதான் காரணம்!
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும், அவரது குடும்பத்தினரும், தங்கள் புகழ்பெற்ற இல்லமான மன்னத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக அங்கிருந்து காலி செய்துள்ளனர்.
சமீபத்தில், அவர்கள் பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி கட்டிடத்திற்குள் குடிபுகுந்துள்ளனர்.
அங்கு அவர்கள் சுமார் இரண்டு ஆண்டுகள் தங்குவார்கள்.
ஷாருக், மனைவி கௌரி மற்றும் குழந்தைகள் - ஆர்யன், சுஹானா மற்றும் அப்ராம் - பாந்த்ராவின் அருகிலுள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி வீட்டிற்கு குடியேறினர்.
மன்னத்தில் புதுப்பித்தல் பணிகள் மே மாதத்தில் தொடங்கவிருந்ததாக HT வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் நீண்ட காலமாக முன்மொழியப்பட்ட பங்களாவின் நீட்டிப்பும் அடங்கும், இதற்காக ஷாருக் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.
விவரங்கள்
மாதத்திற்கு ₹24 லட்சம் வாடகை, நான்கு தளங்கள்!
HT அறிக்கையின்படி, ஷாருக்கான் இந்த வீட்டை பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வாசு பக்னானியிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளார்.
நான்கு தளங்கள் அடங்கிய இந்த புதிய பிளாட்டில் ஷாருக்கான் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களும் இருப்பார்கள். மேலும் அவரின் அலுவலக இடமாகவும் இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
நான்கு தளங்களுக்கும் அவர் மாதத்திற்கு ₹24 லட்சம் வாடகை செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய அவரது குழுவினர் கடுமையான முன்னேற்பாடுகளை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட காலம் தங்க திட்டமிட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மன்னத்தில் புதுப்பித்தல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.