Loading...
ஷாருக்கானின் கிங் பட புதிய போஸ்டர் வெளியீடு: டிசம்பர் 24 திரையரங்குகளில் ரிலீஸ்
'கிங்' திரைப்படத்தின் புதிய போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டுள்ளார்.

ஷாருக்கானின் கிங் பட புதிய போஸ்டர் வெளியீடு: டிசம்பர் 24 திரையரங்குகளில் ரிலீஸ்

எழுதியவர் Vasuki
Oct 27, 2026
04:07 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆக்‌ஷன் திரைப்படமான 'கிங்' படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வாயில் ரோஜாப் பூவை கவ்வியபடி, கண்களில் ஆக்ரோஷமான பார்வையுடன் காதலும் ஆக்‌ஷனும் ஒருசேர கலந்த தோற்றத்தில் ஷாருக்கான் காட்சியளிக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இப்புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஷாருக்கான், "இன்று மீண்டும் நினைவுக்கு வந்தது... நான் கொலைகாரன் அல்ல, காதலன்" என்ற பஞ்ச் வசனத்துடன் வரும் டிசம்பர் 24, 2026 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கதாபாத்திரம்

சாம்பல் நிற சாயல் கொண்ட கதாபாத்திரம்

சமீபத்தில் நடைபெற்ற தனது 60-வது பிறந்தநாள் ரசிகர் சந்திப்பில் 'கிங்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்துப் பேசிய ஷாருக்கான், "மக்கள் எப்போதும் கதாநாயகன், வில்லன் என இரு பிரிவுகளாகப் பார்க்கிறார்கள்; ஆனால் நான் அதை நம்புவதில்லை".

"எனது ஆரம்பக் காலப் படங்களான டார், டான், பாஸிகர், அன்ஜாம் போன்ற படங்களில் நான் நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரங்களில்தான் நடித்தேன்".

அதேபோல 'கிங்' திரைப்படத்திலும் எனது கதாபாத்திரம் இரக்கமற்ற, முற்றிலும் Grey Shade சாயல் கொண்டதாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பாக்ஸ் ஆபீஸ் மோதல்

நட்சத்திரப் பட்டாளம்

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்பிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இதில் ஷாருக்கானுடன் அவரது மகள் சுஹானா கான், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன், அர்ஷத் வார்சி மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

வரும் டிசம்பர் 24 அன்று வெளியாகும் 'கிங்' திரைப்படம், சர்வதேச அளவில் ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே, டூன்: பார்ட் 3 மற்றும் நாகார்ஜுனாவின் 100-வது படமான கிங் 100 ஆகிய பிரம்மாண்ட படங்களுடன் பாக்ஸ் ஆபீஸில் நேரடியாக மோதவுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT