NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்; முதல் ப்ராஜெக்ட் இதுதான்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்; முதல் ப்ராஜெக்ட் இதுதான்!
    மகன் ஆர்யன்கான் உடன் ஷாருக்கான்

    பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்; முதல் ப்ராஜெக்ட் இதுதான்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 20, 2024
    08:49 am

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார். இது குறித்த அறிவிப்பினை ஷாருக் நேற்று வெளியிட்டார்.

    அதன்படி, நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியாகவுள்ள ஒரு வலைத்தொடரை ஆர்யன் இயக்குகிறார். இது 2025இல் வெளியாகிறது.

    இந்த வெப்-தொடரை ஷாருக்-கவுரி கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.

    இணைய தகவல்களின்படி, இது திரையுலகின் பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதையாகும்.

    ஆர்யன் இயக்குனராக அறிமுகமாவதை Xஇல் ஒரு இடுகையுடன் SRK அறிவித்தார், "பார்வையாளர்களுக்கு ஒரு புதிய கதை வழங்கப்படுகிற ஒரு சிறப்பு நாள். @RedChilliesEnt மற்றும் ஆர்யன் கான் @NetflixIndia இல் தங்கள் புதிய தொடரைக் காண்பிக்கும் பயணத்தைத் தொடங்குவது இன்று இன்னும் சிறப்பு வாய்ந்தது" என்று பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    It’s a special day when a new story is being presented for the audience. Today is even more special as @RedChilliesEnt and Aryan Khan embark on their journey to showcase their new series on @NetflixIndia . Here’s to untamed story telling….controlled chaos…gutsy scenes and lots… pic.twitter.com/8v0eBzRZ6S

    — Shah Rukh Khan (@iamsrk) November 19, 2024

    விவரங்கள்

    வலைத்தொடர் பற்றி இதுவரை வெளியான தகவல்கள்

    இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் தொடர், லட்சிய கனவுகளுடன் வெளியிலிருந்து பாலிவுட் என்ற கவர்ச்சியான மற்றும் சவாலான சாம்ராஜ்யத்தில் காலடி எடுத்து வைக்கும் நபர், எதிர்கொள்ளவேண்டிய ​​தைரியமான மற்றும் பொழுதுபோக்கு பயணத்தை பற்றி ஒரு காணோட்டத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிக நாடகம், கூர்மையான நகைச்சுவை, நட்சத்திர கேமியோக்கள் ஆகியவற்றால் நிரம்பிய இந்த தொடர், இந்திய சினிமாவிற்கு மறக்க முடியாத அஞ்சலியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்காலிகமாக ஸ்டார்டம் என்று பெயரிடப்பட்ட இந்தத் தொடரில் மோனா சிங் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடவே இதில் ஷாருக், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், கரண் ஜோஹர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஷாருக்கான்
    ஷாருக் கான்
    பாலிவுட்
    நெட்ஃபிலிக்ஸ்

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    ஷாருக்கான்

    'ஜவான்' படத்தின் 'வந்த எடம்' பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது  விஜய் சேதுபதி
    ஜவான் படத்தின் இரண்டாவது பாடல், 'ஹையோடா' வெளியானது பாடல் வெளியீடு
    'ஜவான்' திரைப்படத்தில் உலகத்தரம் மிக்க 6 சண்டை பயிற்சியாளர்கள் இயக்குனர்
    அட்லீ- ஷாருக்கான் 'ஜவான்' திரைப்படத்தின் தணிக்கை குழு பரிந்துரை வைரலாகி வருகிறது ஷாருக் கான்

    ஷாருக் கான்

    பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு படையெடுத்த ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்! ஏன் தெரியுமா? ஷாருக்கான்
    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  இசை வெளியீடு
    ஜவான் திரைப்பட ட்ரைலர் வெளியானது  ஷாருக்கான்
    ஜவான் படவெற்றிக்காக திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான் மற்றும் நயன்தாரா திருப்பதி

    பாலிவுட்

    'ஜவான்' படத்திற்கு பிறகு மற்றுமொரு ஷாருக்-அனிருத் காம்போ! அனிருத்
    சாய்பல்லவி நடிக்கும் ராமாயணம் இரண்டு பாகங்களைக் கொண்ட காவியமாக உருவாகிறது, மூன்று பாகங்கள் அல்ல! சாய் பல்லவி
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி ஷாருக்கான்
    27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கஜோலுடன் இணையும் நடனப்புயல் பிரபுதேவா! தெலுங்கு திரையுலகம்

    நெட்ஃபிலிக்ஸ்

    கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு  கார்த்தி
    ரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்! திரைப்பட வெளியீடு
    ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை பார்ப்பதாக ஹாலிவுட் இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் உறுதி கார்த்திக் சுப்புராஜ்
    'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு பிரபாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025