புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்!
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் இன்று சென்னையில் இரவு காலமானார். அவர் கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நேத்ரன் நடிப்புலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்த்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியலில் நடித்து வருகிறார். அப்படி நடிக்கையில் தன்னோடு சீரியலில் நடித்த தீபா என்பவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
Twitter Post
விஜய் டிவியின் பிரபல டான்ஸ் ஷோவில் மகளுடன் நடனமாடிய நேத்ரன்
சில ஆண்டுகளுக்கு முன் நேத்திரன் விஜய் டிவியின் பிரபல டான்ஸ் ஷோவில் (ஜோடி நம்பர் 1) தனது மூத்த மகள் அபிநயாவுடன் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அபிநயா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கடந்த ஜூலை மாதம் அபிநயா தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தினார். அதில் தன்னுடைய தந்தை இப்பொழுது ஐசியூவில் இருப்பதாகவும், எல்லாம் கைமீறி போன நிலைக்கு இப்பொழுது தனது தந்தையின் உடல்நிலை வந்து இருப்பதாகவும் கூறினார். தனது தந்தைக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றும், இனி மக்களாகிய உங்களுடைய பிரார்த்தனை தான் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.