லோகேஷ் கனகராஜை தொடர்ந்து, சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாக இரத்தினகுமார் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில், 6 மாதங்கள் சோஷியல் மீடியாவிலிருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
அதே போல, தற்போது திரைக்கதை ஆசிரியர் இரத்தினகுமாரும், அவர் வழியிலே, சமூக ஊடகங்களில் இருந்து சிலகாலம் விலகி இருக்கப்போவதாகவும், அடுத்த படத்தின் வேலைகளில் முழுக்கவனம் செலுத்தும் போவதாகவும் அறிவித்துள்ளார்.
தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் வரை தான் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னரும், 'லியோ' படத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்த சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருக்க முடிவெடுத்திருந்தார்.
தற்போது, அடுத்ததாக அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒரு படம் இயக்கவுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக்
Both Lokesh Kanagaraj & Rathnakumar take a break from Social Media for the preparations of their next project,💥 pic.twitter.com/XsVAHARtbZ
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 2, 2023