Page Loader
தேசிய விருது வாங்கும் அளவிற்கு ஒரு படத்தை இயக்க ஆசையாம் சரத்குமாருக்கு! ஹீரோயின் இவங்கதான்..!
சரத்குமார் ஏற்கனவே தலைமகன் என்ற படத்தை இயக்கியுள்ளார்

தேசிய விருது வாங்கும் அளவிற்கு ஒரு படத்தை இயக்க ஆசையாம் சரத்குமாருக்கு! ஹீரோயின் இவங்கதான்..!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 23, 2024
09:59 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் சரத்குமாரின் அறுபதாவது திரைப்படமாக வெளியாகவுள்ள 'தி ஸ்மைல் மேன்' படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது சரத்குமாரிடம் படத்தை இயக்க ஆசை இருக்கிறதா என கேட்கப்பட்டது. அவர் பதில் கூறும்போது, "என் மனைவி ராதிகா மிகச் சிறந்த நடிகை. அவர் நடிப்பில், அவருக்குத் தேசிய விருது கிடைக்கும் படத்தை இயக்கும் ஆசை எனக்கு உள்ளது. அது நிச்சயமாக நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். அதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன" என்றார். சரத்குமாரும், ராதிகாவும் சூரிய வம்சம், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சரத்குமார் ஏற்கனவே தலைமகன் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

தி ஸ்மைல் மேன் படத்தை பற்றிய விபரங்கள்

ஷ்யாம்-பிரவீன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் செய்தியாளர் சந்திப்பில், சரத்குமார் பேசுகையில், "இது ஒரு கிரைம் கதை. தற்போது கிரைம் த்ரில்லர் கதைகளுக்கு பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம், அதன் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். போலீசாரின் கதைகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளேன். இந்த படத்தில், நினைவுகளை மறந்து விடுகிற அதிகாரியாக நடித்துள்ளேன். அவரால் ஒரு வழக்கை சரியாக முடிக்க முடிகிறதா, இல்லையா என்பதைப் பற்றி கதை முன்னேறுகிறது" என்றார்.