Page Loader
நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரின் நடிப்பை பறைசாற்றும் சில படங்கள்
நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் இன்று

நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரின் நடிப்பை பறைசாற்றும் சில படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 26, 2023
10:08 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரைப்படங்களில், நாயகியாக அறிமுகம் ஆகி, தற்போது நாயகர்களின் ஃபேவரெட் அம்மாவாக வலம் வரும் பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் இன்று. நடிப்பு, பிசினஸ் என இரு வேறு துறைகளிலும் தற்போது கொடிகட்டி கலக்கி வருகிறார். அவரின் தத்ரூபமான நடிப்பிற்காக தேசிய விருதும் வென்றுள்ளார். சரண்யா பொன்வண்ணனின் எதார்த்த நடிப்பில் வெளியான சில படங்களை பற்றி ஒரு தொகுப்பு: நாயகன்: பயந்த பெண்ணாக, பாலியல் தொழிலில் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணாக, மணிரத்னம் இயக்கத்தில் அறிமுகமான திரைப்படம் இது. இந்த படம் தேசிய விருதிற்கு பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராம்: பாசமிகு அம்மாவாக, ஜீவாவுடன் இவர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகுதான் அவர் ஹீரோக்களின் ஃபேவரெட் அம்மாவாக மாறினார் எனக்கூறலாம்.

card 2

தேசிய விருது பெற்றுத்தந்த 'தென்மேற்கு பருவக்காற்று' 

தென்மேற்கு பருவக்காற்று: விஜய் சேதுபதிக்கு பெரிய அறிமுகம் கிடைத்த படம் இது. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் மூலமாக, சரண்யா பொன்வண்ணனிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தவமாய் தவமிருந்து: சேரன் இயக்கத்தில் வெளியான நெகிழ்ச்சியான குடும்பப்படம் இது. இந்த திரைப்படமும், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. எம்டன் மகன்: அதுவரை சோகத்தை பிழியும் தாயக நடித்த வந்த சரண்யா, காமெடியில் கலக்கி இருந்த திரைப்படம் எம்டன் மகன். வடிவேலுவுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகள் ரசிக்க வைத்தன. ஒரு கல் ஒரு கண்ணாடி: உதயநிதி ஹீரோவாக அறிமுகம் ஆன இந்த படத்தை, தாங்கி பிடித்த தூண்களில் சரண்யாவும் ஒருவர் என்றால் அது மிகையாகாது.