பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர், இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார்
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரருமான சங்கீத் சிவன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65. இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கீத் சிவன், முதன்முதலில் 1990-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வியூகம்' என்கிற மிகப்பெரும் மலையாள படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர், அவர் மோகன் லாலை வைத்து 'யோதா' என்கிற மற்றுமொரு வெற்றி படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் பல படங்களை இயக்கியுள்ளார். சங்கீத் சிவனின் இறப்பு, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.