
விஜயின் அரசியல் பயணத்தில் உடன் நிற்பேன்: இயக்குனர் சமுத்திரக்கனி
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜயின் அரசியல் பயணித்தால் அவருடன் நிற்க எப்போதுமே தயார் என இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,"விஜய் நல்ல மனிதர். அரசியல் செய்ய வருகிறார். அவருக்கு எப்போதுமே எனது முழு ஆதரவு இருக்கும். தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன். அவர் என்னை பிரசாரத்துக்கு கூப்பிடவில்லை என்றாலும். நல்ல விஷயத்துக்காக நானே முதலில் செல்வேன்" என தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர், நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து விஷாலும், தேவைப்படின் அரசியலில் இறங்க தயங்கமாட்டேன் என கூறிய நிலையில், சமுத்திரக்கனியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சமுத்திரக்கனியின் கருத்து
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன் என இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி பேட்டி#TVK #Vijay #samudrakani pic.twitter.com/IEb5MvfMUa
— Thanthi TV (@ThanthiTV) February 16, 2024