அடுத்த செய்திக் கட்டுரை

'சிக்ஸ் பேக்' சமந்தா: தெறிக்கவிடும் புதிய ஒர்க் அவுட் புகைப்படம்
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 20, 2023
11:43 am
செய்தி முன்னோட்டம்
நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது, புகைப்படங்களை பதிவேற்றுவார். சில நேரங்களில் தத்துவார்த்தமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் சமந்தா, பல நேரங்களில், தனது ஒர்க்-அவுட் வீடியோக்களை தான் அதிகம் ஷேர் செய்வதுண்டு.
இந்நிலையில், இன்று (மார்ச் 20), அவர் plank செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
அதை கண்ட பலரும், அவரின் பலத்தை கண்டு சிலாகித்து வருகின்றனர்.
அந்த புகைப்படத்தில், சமந்தாவிற்கு 'சிக்ஸ்-பேக்' இருப்பதாக ஒரு சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வேறு சிலரோ, 'சினிமா உலகத்திலேயே மிகவும் வலிமையான பெண் சமந்தா' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சமந்தா, தற்போது, 'சிட்டாடெல்' என்ற சீரீஸின் இந்திய பதிப்பில், நடித்து வருகிறார்.
ஆங்கில வலைத்தொடரில், பிரியங்கா சோப்ரா நடித்த கதாபாத்திரத்தில், தற்போது சமந்தா நடிக்கிறார்.