Page Loader
மருத்துவமனையில் நடிகை சமந்தா- மருத்துவமனையில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வைரல் 
மருத்துவமனையில் இருப்பது போன்று சமந்தா பகிர்ந்துள்ள புகைப்படம்(வலது புகைப்படம்).

மருத்துவமனையில் நடிகை சமந்தா- மருத்துவமனையில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வைரல் 

எழுதியவர் Srinath r
Oct 12, 2023
05:03 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் பதிவிட்டிருந்தார், அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் வாயிலாக தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்துள்ளார். மயோசிடிஸ்(தசை அழற்சி) நோய் என்பது தசைகளை பலவீனமாக்கும் ஒரு ஆட்டோ இம்யூன் வியாதி. தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த ஆண்டு சமந்தா தெரிவித்து இருந்தார். தற்போது அவர் அதே நோய்க்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2nd card

மீண்டும் கணவருடன் இணைகிறார் சமந்தா?

நடிகை சமந்தா தன் கணவரான நாகசைதன்யாவை கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்தார். சமந்தா நாகசைதன்யா பிரிவிற்கு, பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான காரணத்தையும் அறிவிக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாகசைதன்யா, தனது நாயுடன் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். அந்த நாய் சமந்தா மற்றும் நாகசைதன்யா திருமண வாழ்க்கையில் இணைந்து இருந்தபோது அவர்கள் வாங்கியது. இதன் மூலம் நடிகர் நாகசைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைவார்கள் என பேசப்பட்டது. ஆனால் சமந்தா தனது துபாய் புகைப்படங்களை பகிர்ந்து இருந்த போது, அவர் போட்டுக்கொண்டிருந்த நாகசைதன்யாவின் டேட்டூ அழிக்கப்பட்டு இருந்தது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.