Page Loader
தனது திருமண ஆடையை ரீ மாடல் செய்த சமந்தா; குவியும் பாராட்டுகள்
அவருடைய வெள்ளை நிற திருமண உடையை ரீமாடல் செய்து அணிந்துள்ளார்

தனது திருமண ஆடையை ரீ மாடல் செய்த சமந்தா; குவியும் பாராட்டுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 26, 2024
04:34 pm

செய்தி முன்னோட்டம்

நடிகைகள் பொதுவாக பொதுவெளிக்கு வரும்போது பேஷனில் அதிகம் செலுத்துவதுண்டு. அவர்கள் அணியும் ஆடைகளை பலரும் உற்று நோக்குவதுண்டு. ஆனால் அதிலும் 'சஸ்டைனபிலிட்டி' எனப்படும் ரீசைக்ளிங் முறையை பயன்படுத்தலாம் என நடிகை சமந்தா தற்போது நிரூபித்துள்ளார். அவருடைய வெள்ளை நிற திருமண உடையை ரீமாடல் செய்து அதை கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையாக மாற்றியுள்ளார். ஒரு விருது நிகழ்ச்சிக்காக அவர் தனது திருமண கவுனை துண்டித்து, கருப்பு நிற காக்டெய்ல் கவுனாக மாற்றியுள்ளார். தனது மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஆடையின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், 'சஸ்டைனபிலிட்டி'யை இனி புறக்கணிக்க முடியாது என்று எழுதினார். இது தனது 'பிரியமான கவுன்' என்றும் குறிப்பிட்டுள்ளார், இது ஒரு சிறப்பு சந்தர்ப்பத்திற்காக மீண்டும் பயன்படுத்தப்பட்டது எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.

embed

ஆடையை ரீ மாடல் செய்த சமந்தா

Congratulations to Our Queen @Samanthaprabhu2 for being honored with the #ElleSustainabilityAwards 2024! 🔥👑 She's truly an unstoppable force. You go, girl! ❤️ #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/hppfHqFbEm— Samantha FC || TWTS™ (@Teamtwts2) April 26, 2024