Page Loader
முதல் படம் வெளியாகும் முன்பே எட்டு படங்களில் கையெழுத்திட்ட சாய் அபயங்கர்!
8 திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சாய் அபயங்கர்!

முதல் படம் வெளியாகும் முன்பே எட்டு படங்களில் கையெழுத்திட்ட சாய் அபயங்கர்!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 11, 2025
02:24 pm

செய்தி முன்னோட்டம்

இன்னும் ஒரு படம் கூட திரைக்கு வராத நிலையில், ஏற்கனவே 8 திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஒரு இளம் இசையமைப்பாளர். 20 வயதான சாய் அபயங்கர், 'கட்சி சேர' என்ற தனது முதல் ஆல்பம் பாடலால் இணையத்தில் அதிர்வலையை உருவாக்கி, தென்னிந்திய சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னணிப் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகனான சாய் அபயங்கர், சிறு வயதிலிருந்தே இசையில் தீவிர பயிற்சி பெற்றவர். அவரது சகோதரி சாய் ஸ்மிருதியும் ஒரு பாடகி.

கவனம்

கவனத்தை ஈர்த்த ஆல்பம் பாடல்கள் 

2024ல் வெளியான "கட்சி சேர" என்ற அவரது முதல் தனிப்பாடல், சம்யுக்தா விஸ்வநாதன் நடிப்பில் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக ஆச கூட, சித்திர புதிரி, மற்றும் சமீபத்தில் வெளியான விழி வீகுரா ஆகிய பாடல்களும் இணையத்தில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன. இவையே அவர் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவனத்தை திரும்ப வைத்தது. தற்போது 8 படங்களில் அவர் ஒப்பந்தமாகவும் இவையே காரணம்.

படங்கள்

'பென்ஸ்' முதல் '800 கோடி' வரை

ஜூன் 12ல் ராகவா லாரன்ஸ் நடிக்கும் "பென்ஸ்" என்ற படத்தில் இசையமைப்பாளராக அவர் கையெழுத்திட்டது முதல், தற்போது வரை மொத்தம் 8 திரைப்படங்கள் அவரது கையில் உள்ளன. இதில் முக்கியமானவை: அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணியில் உருவாகும், ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அறிவியல் புனை கதை ஆக்‌ஷன் படம். RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'கருப்பு'. சிவகார்த்திகேயனின் 'SK 24' கார்த்தி நடித்துள்ள 'மார்ஷல்', STR 49 மற்றும் STR நடிக்கும் இன்னொரு படம் இது தவிர ஷேன் நிகம் நடிப்பில் மலையாளப் படமான 'பல்டி'.