அடுத்த செய்திக் கட்டுரை

கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் விருதுகளை வென்ற RRR
எழுதியவர்
Venkatalakshmi V
Jan 16, 2023
04:36 pm
செய்தி முன்னோட்டம்
சென்ற வாரத்தின் தொடக்கத்தில் கோல்டன் குளோப் விருதை வென்றதை தொடர்ந்து, அமெரிக்கவில் RRR திரைப்படம் மேலும் பல விருதுகளை வென்று வருகிறது.
நேற்று அப்படத்தின் இசைக்காக, இசையமைப்பாளர் கீரவாணிக்கு, சிறந்த இசையமைப்பாளர் விருதை வழங்கியுள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் (LAFCA).
அதன் தொடர்ச்சியாக, 28வது கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளில், சிறந்த பாடல் (நாட்டு நாட்டு) மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான விருதுகளை வென்றுள்ளது.
RRR படத்துடன் போட்டியிட்ட மற்ற படங்கள்: 'ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்', 'அர்ஜென்டினா 1985', 'பார்டோ', 'ஃபால்ஸ் க்ரோனிக்கிள் ஆஃப் எ ஹேண்ட்ஃபுல் ஆஃப் ட்ரூத்ஸ்', 'க்ளோஸ்' மற்றும் 'லீவ் டு லீவ்' ஆகியவை ஆகும்.
ட்விட்டர் அஞ்சல்
கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது வென்ற RRR
Cheers on a well deserved win @RRRMovie 🥂! pic.twitter.com/f3JGfEitjE
— Critics Choice Awards (@CriticsChoice) January 16, 2023