Page Loader
உலக அரங்கில் விருதுகளை குவிக்கும் RRR திரைப்படம்
RRR படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு, மேலும் ஒரு விருது

உலக அரங்கில் விருதுகளை குவிக்கும் RRR திரைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2023
11:48 am

செய்தி முன்னோட்டம்

RRR திரைப்படம், உலக அரங்கில் மேலும் ஒரு விருதை வென்றுள்ளது. அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு, சிறந்த இசையமைப்பாளர் விருதை வழங்கியுள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் (LAFCA). சென்ற வாரம் தான், RRR படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலை, சிறந்த பாடலாக தேர்ந்தெடுத்து, கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருதை வழங்கினர். தற்போது, மேலும் ஒரு விருதை, அந்த படத்தின் இசை வென்றுள்ளது. மேலும், அப்படத்தின் இயக்குனரான ராஜமௌலி-ஐ சிறந்த இயக்குனராக தேர்ந்தெடுத்து, விருது வழங்கியது, நியூயார்க் கிரிட்டிக்ஸ் சர்க்கிள். இசையமைப்பாளர் கீரவாணி பெற்ற இந்த விருது குறித்து, அப்படத்தின் குழு, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

RRR படத்திற்கு குவியும் விருதுகள்

RRR

உலக அரங்கில் RRR

RRR பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. மேற்கூறிய விருதுகளைத் தவிர, சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான 'சாட்டர்ன் விருது' மற்றும் ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கத்தின் 'ஸ்பாட்லைட் விருது' ஆகியவற்றையும் வென்றுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட, 'நேஷனல் போர்டு ஆஃப் ரிவியூ', இந்த ஆண்டின் சிறந்த 10 படங்களில், இந்த படத்தையும் தேர்ந்தெடுத்து உள்ளது. 'அட்லாண்டா ஃபிலிம் கிரிட்டிக்ஸ்' சர்க்கிளில் இந்தப் படம் சிறந்த சர்வதேச அம்சத்தை வென்றது.