
கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு
செய்தி முன்னோட்டம்
எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான "RRR" திரைப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றது. இந்த விருதை பெறும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.
இந்த வெற்றியை தொடர்ந்து, அப்பட குழுவினருக்கு, நாட்டு மக்களும், இந்தியா திரைப்படத்துறையினரும், தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த வெற்றியை, "மிகச் சிறப்பான சாதனை!" என்றும், "இந்த மதிப்புமிக்க கௌரவம், ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது" என்று பாராட்டினார்.
ஆஸ்கார் நாயகன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், "அசாத்தியமானது. இந்த வெற்றி அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம்" என்று குறிப்பிட்டார்.
இசைஞானி இளையராஜாவும் "மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கீரவாணி, ராஜமௌலி ஆகியோரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி" என்று கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
A very special accomplishment! Compliments to @mmkeeravaani, Prem Rakshith, Kaala Bhairava, Chandrabose, @Rahulsipligunj. I also congratulate @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan and the entire team of @RRRMovie. This prestigious honour has made every Indian very proud. https://t.co/zYRLCCeGdE
— Narendra Modi (@narendramodi) January 11, 2023
ரஜினி முதல் கமல் வரை பாராட்டு
பாராட்டு மழையில் RRR குழு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பதிவில், "இந்திய சினிமாவுக்கு கோல்டன் குளோப் விருதை கொண்டு வந்து எங்களை பெருமைப்படுத்தியதற்காக கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசன் கூறுகையில், "தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா", "முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்". என்று ட்வீட் செய்துள்ளார்.
இதோடு, ஹிந்தி பட நாயகர்கள், அமிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் அப்படத்தில் நடித்த அலியா பட் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில், பாடகர்கள் ராகுல் சிப்ளிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் பாடிய இந்த பாடல், உலகம் முழுவதும் வைரல் ஆனது.
ட்விட்டர் அஞ்சல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு
THANK YOU Keeravani and Rajamouli for making us proud and bringing home the Golden Globe for Indian cinema.@mmkeeravaani @ssrajamouli
— Rajinikanth (@rajinikanth) January 11, 2023