Loading...
இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
அமெரிக்காவுக்கு முன்னதாக இந்தியாவில் வெளியாகிறது அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படம்.

இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

எழுதியவர் Vasuki
Oct 28, 2026
04:14 pm

செய்தி முன்னோட்டம்

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிக பிரம்மாண்ட படைப்பான 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தின் முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் இந்திய ரசிகர்களுக்கு தங்களது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசாக, இப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது வரும் டிசம்பர் 17-ஆம் தேதியே இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிரடி அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வாழ்த்து

தீபாவளி வாழ்த்து கூறிய டவுனி மற்றும் கிறிஸ் எவன்ஸ்

இப்படத்தில் 'டாக்டர் டூம்' என்ற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியரும், ஸ்டீவ் ரோஜர்ஸாக கிறிஸ் எவன்ஸும் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இந்திய ரசிகர்களுக்காகப் பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "நமஸ்தே இந்தியா! தீபாவளிப் பண்டிகையில் எங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், அது ஒரு அத்தியாயத்தின் முடிவையும் மற்றொன்றின் தொடக்கத்தையும் குறிக்கிறது; அதைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும்".

"ஆனால் இருளிலிருந்து வெளிச்சத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, இந்த முறை எல்லாம் வேறு திசையில் செல்லக்கூடும்... அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தில் உங்களைச் சந்திக்கிறோம்" என்று உற்சாகத்துடன் வாழ்த்தியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

டிசம்பர் 17 ரிலீஸ்

டிரெய்லர் தரும் எதிர்பார்ப்பு

மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் பரம எதிரியாக ராபர்ட் டவுனியின் 'டாக்டர் டூம்' உருவெடுத்துள்ள நிலையில், ஃபான்டாஸ்டிக் ஃபோர், அவெஞ்சர்ஸ் மற்றும் எக்ஸ்-மென் கூட்டணிகளை அவர் எதிர்கொள்ளும் விறுவிறுப்பான காட்சிகள் சமீபத்தில் வெளியான டிரெய்லரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்திய ரசிகர்களின் பேராதரவைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவுக்கு முன்பே இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகத் திரையிடப்படுவது மார்வெல் பிரியர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படம் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் பிரம்மாண்டமாக டிசம்பர் 17 அன்று திரைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT