
பவர் ஸ்டார் தொடங்கி துணை முதல்வர் அரியாசனம் வரை: பவன் கல்யாணின் பயணம் ஒரு பார்வை
செய்தி முன்னோட்டம்
திரையில் கோபம் கொப்பளிக்கும் இளைஞனாக, காதல் வசனம் பேசி வசீகரிக்கும் நாயகனாக தெலுங்கு சினிமாவை பல ஆண்டுகளாக கட்டி ஆண்ட 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் இன்று துணை முதல்வராக பதவி ஏற்றார்.
தனது அண்ணன் சிரஞ்சீவியின் பாதையில் சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தாலும், தனக்கென ஒரு ஸ்டைல், தனிக்கான ஒரு பாணி என முத்திரை பதித்து இன்றும் இளைஞர்களை கவர்ந்த நாயகனாக சூப்பர் ஹிட் படங்களை நடிக்கும் பவன் கல்யாண் அரசியலில் நுழைந்ததும் அண்ணன் காட்டிய வழியில் தான்.
அவரின் வெள்ளித்திரை டூ சட்டசபை வாழ்க்கை பற்றி ஒரு சிறு பார்வை!
அரசியல் நுழைவு
ஆரம்பத்தில் சரிவை கண்ட பவன் கல்யாண்
1996 தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கிய பவன் கல்யாண், தொடர்ந்து வெற்றி படங்களை நடித்தார்.
அவர் பங்கிற்கு சில தோல்வி படங்கள் அமைந்தாலும், மக்களிடத்தில் அவரது அபிமானம் குறையவில்லை.
அவரும் ரசிகர்களும், பொதுமக்களும் பல நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வந்தார்.
இந்த நிலையில், சிரஞ்சீவி தொடங்கிய பிரஜ ராஜ்ஜியம் கட்சியின் மூலமாக அரசியலில் நுழைந்தார் பவன்.
எனினும் சிரஞ்சீவி தனது கட்சியினை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர் துவண்டு போகாமல், 2014இல் ஜன சேனா என்ற தனிக்கட்சியை துவங்கினார் பவன்.
2019 தேர்தலில் தனித்து போட்டியிட்டு கடும் தோல்வியை தழுவினார் பவன் கல்யாண்.
எழுச்சி
மீண்டு வந்தார் பவன்
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கடும் தோல்வியை சந்தித்திருந்தாலும், தொடர்ந்து மக்களிடையே பணியாற்றி வந்தார் பவன்.
'தோல்வியில் துவண்டலும் மக்கள் பணியினை கைவிடாதவர்' என ஊடகங்கள் இவரை புகழ்ந்தன.
இந்த நிலையில், 2022-இல் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு எதிராக 'ஜன வாணி' என்ற மக்களை சந்திக்கும் கூட்டத்தை பல ஊர்களில் நடத்தினார். அப்போதுதான் அவரை கைது செய்தது ஆளும் YSRP.
இந்த கைது நடவடிக்கை அவருக்கு மிகப்பெரும் பிளஸ்-ஆக மாறிப்போனது. அவருக்கு தனது ஆதரவை நீட்டினார் சந்திரபாபு நாயுடு.
ஆரம்பம் முதல் பாஜகவிற்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஆதரவு குரல் கொடுத்து வந்த பவன் கல்யாண், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். கூட்டணியாக தேர்தலில் போட்டியிட இருவரும் முடிவெடுத்தனர்.
தேர்தல் 2024
போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி
ஆரம்ப காலத்தில் இவரை மதிக்காத டெல்லி, இவரின் ஆதரவு பெற்று மக்களவை தேர்தலை சந்தித்தது.
ஜன சேனா வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
NDA கூட்டணி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதும், பிரதமர் NDA தலைவர்களிடையே உரையாற்றியபோது, பவன் கல்யாணை, "இவர் பவன் அல்ல (பூங்காற்று); இவர் ஒரு புயல்" என்று பெருமையாக குறிப்பிடும் அளவிற்கு செல்வாக்கு பெற்றார் பவன்.
இன்று நடைபெற்ற பதியேற்பு விழா மேடையில் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க இவர் பெயரை உச்சரித்த போது அரங்கமே ரசிகர்கள் கோஷத்தால் அதிர்ந்தது.
அதனை ஆனந்த கண்ணீருடன் அதே மேடையில் அமர்ந்து பவன் கல்யாணின் அண்ணன் நடிகர் சிரஞ்சீவி ரசித்து பார்த்த தருணம் பலரையும் நெகிழ வைத்தது!
ட்விட்டர் அஞ்சல்
பிரதமரை தனது தனையனிடம் அழைத்து வந்தார் பவன்
Moment of the day 🤩✨
— Cinethop (@cinethop) June 12, 2024
MEGA ⭐ @KChiruTweets Garu and Minister of AP @PawanKalyan Garu with Prime Minister @narendramodi Garu#NarendraModi #MegastarChiranjeevi #Chiranjeevi #PawanKalyanAneNenu#PawanKalyan pic.twitter.com/U3RFz3GQsK
ட்விட்டர் அஞ்சல்
அரங்கம் அதிர பதவியேற்ற பவன்
Konidela Pawan Kalyan Ane Nenu
— Raghav (@Raghavaroyal6) June 12, 2024
Waiting for this moment #PawanKalyan #PawanKalyanAneNenu pic.twitter.com/NFYRbzPTPO