NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சின்ன கலைவாணர் விவேக்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்
    சின்ன கலைவாணர் விவேக்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்
    பொழுதுபோக்கு

    சின்ன கலைவாணர் விவேக்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்

    எழுதியவர் Venkatalakshmi V
    April 17, 2023 | 02:22 pm 1 நிமிட வாசிப்பு
    சின்ன கலைவாணர் விவேக்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்
    என்றென்றும் நினைவை விட்டு நீங்காத 'சின்ன கலைவாணர்' விவேக்

    கோலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரான பத்மஸ்ரீ விவேக் மறைந்து இன்றுடன் இரண்டாண்டுகள் ஆகிறது. தனது நகைச்சுவையாலும், சிந்தனை தூண்டும் கருத்துக்களிலும், 'சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்பட்ட விவேக்கின் மரணம், இன்று வரை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சினிமா மட்டுமன்றி, சமூகம் சார்ந்த எந்த ஒரு நல்ல விஷயத்திற்கும், முன்னோடியாக அவரே வந்து நிற்பார். மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் பிரியமான நபர்களில் ஒருவரரான விவேக், கடைசி வரை அன்னாரின் கனவான '1 கோடி மரக்கன்றுகளை நடுதல்' என்ற அறப்பணியை சிரமேற்கொண்டு நடத்தி வந்தார். இரு சகோதரிகளுடன் பிறந்த விவேகானந்தன் என்கிற விவேக், சிறு வயது முதலே துறுதுறுவென இருந்ததாக அவரின் அக்கா ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார்.

    கமலுடன் இந்தியன் 2 திரைப்படத்தில் இணைந்த விவேக்

    விவேக் இறக்கும் வரையில் 220 திரைப்படங்கள். கடைசியாக அவர் நடித்தது இந்தியன் 2 திரைப்படத்தில். அவரின் நினைவாக, அவர் நடித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கபட மாட்டாது என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனுடன் அவர் இணைந்து நடித்த முதலும், கடைசியுமான படம் அதுவே. அதே போல, 'தி லெஜெண்ட்' திரைப்படத்திலும், அவரது காட்சிகளுக்கு லைவ் டப்பிங் மற்றும் பலக்குரல் டப்பிங் கலைஞர்களை வைத்து படத்தை நிறைவு செய்தனர். தற்போது வரை, அவர் நடிப்பில் வெளியாகி உள்ள கடைசி திரைப்படமும் அதுதான். மறைந்த விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவர் வாழ்ந்த தெருவிற்கு 'சின்ன கலைவாணர் விவேக் ரோடு' என உடனடியாக பெயர் மாற்றம் செய்து அறிவித்தது தமிழக அரசு.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோலிவுட்

    கோலிவுட்

    குந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு த்ரிஷா
    800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா?  விஜய் சேதுபதி
    நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது விக்ரம்
    நான் அழகு என்று உறுதியாக நம்ப பல ஆண்டுகள் ஆனது - பிரபல பாலிவுட் நடிகை வைரல் செய்தி
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023