Page Loader
இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது என தகவல்
இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது

இந்தியன் 2 படத்தில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது என தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 27, 2023
12:19 pm

செய்தி முன்னோட்டம்

மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்துக்கொண்டிருந்த படம் இந்தியன் 2. அவரின் திடீர் மறைவிற்கு பின்னர், அவர் நடித்திருந்த காட்சிகள் என்னவாகும் என்பதற்கு தற்போது விடை தெரிந்துள்ளது. ஊடக செய்திகளின்படி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர் நடித்த காட்சிகள் எதுவும் நீக்கப்படாது எனக்கூறப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விவேக், தமிழ் திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அவர், கடந்த ஏப்ரல் 2017-ல் மாரடைப்பால் காலமானார். இயக்குனர் பாலச்சந்தரின் பள்ளியில் இருந்து வந்தவர்கள் இருவருமே. ஆனால், இதுநாள் வரையில் இருவரும் இணைந்து நடித்தது இல்லை. அந்த குறை விவேக்கிற்கு எப்போதுமே இருந்தது. கடைசியாக, அவர் இந்தியன் 2-ல் கமலுடன் இணைந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு முடிவடையும் முன்னரே அவர் மரணம் அடைந்தார்.

விவேக்

விறுவிறுப்பாக நடைபெறும் இந்தியன் 2 படப்பிடிப்பு

அவரின் மறைவிற்கு பிறகு, அவர் நடித்த காட்சிகள், படத்தின் தொடர்ச்சி பாதிக்கப்படகூடாதென்று நீக்கப்படும், என செய்திகள் வெளியாயின. இந்நிலையில், ஊடக செய்திகள்படி, விவேக் தொடர்பான காட்சிகள் நீக்கப்படாது மற்றும் மாற்றப்பட்டது எனவும் கூறப்படுகிறது. எனினும், விவேக் காட்சிகளுக்கு, யார் டப்பிங் பேசுவார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. இந்தியன் 2 படத்தில், கிட்டத்தட்ட 6 வில்லன்கள் நடிக்கவுள்ளதாகவும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை, தனுசுக்கொடியில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.