'காதல் மன்னன்' ஜெமினி கணேசனின் மகள் ரேகாவின் காதல் தோல்விகள்
'காதல் மன்னன்' ஜெமினி கணேசனுக்கும், முதல் மனைவி புஷ்பவல்லிக்கும் பிறந்தவர் தான் ரேகா. ஆரம்பத்தில் ரேகாவை மகளை அங்கீகரிக்காத ஜெமினி கணேசன், ஒரு கட்டத்தில் ரேகா பாலிவுட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக மாறியபின், தன்னுடைய மகள் என வெளிப்படையாக கூறினார். இந்த கதை பலரும் அறிந்ததே. பாலிவுட்டின் 'எவெர்க்ரீன் திவா' என்றழைக்கப்படும் ரேகா, இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 40 வருடத்திற்கு மேலாக பாலிவுட்டில் கலக்கி வரும் பானுரேகா என்ற ரேகா, இதுவரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எத்தனையோ விருதுகளை வென்ற ரேகா, தனிப்பட்ட வாழ்க்கையில் பல காதல் தோல்விகளை கண்டவர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ரேகாவின் காதல் தோல்விகள்
ரேகா-ஜீதேந்திரா: நடிகையான புதிதில், ரேகா, அப்போதைய டாப் நடிகரான ஜீதேந்திரா உடன் காதல் வயப்பட்டுளார் என கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் பல பொது இடங்களில் சேர்ந்து தென்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஏற்கனவே திருமணமான ஜீதேந்திரா ரேகாவுடன் கிசுகிசுக்கப்படுவது, அவரது மனைவி ஷோபா கபூருக்கு தெரிய வரவே, ஜீதேந்திராவை பிரிந்தார் ரேகா. ரேகா- கிரண் குமார்: முதல் காதல் தோல்வியில் முடியவே, பிரபல வில்லன் நடிகரான கிரண் குமாருடன் காதலில் சிக்கியதாக கூறப்பட்டது. ஆனால், இவர்களுடைய காதல் குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது.
ரேகாவின் காதல் தோல்விகள்
ரேகா-வினோத் மெஹ்ரா: ரேகா, பாலிவுட் நடிகர் வினோத் மெஹ்ராவுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூட செய்திகள் பரவியது. ஆனால், வினோத்தின் தாயாருக்கு இந்த திருமணத்தில் ஒப்புதல் இல்லாத காரணத்தால், ரேகா அவரை பிரிந்து விட்டார். ரேகா-அமிதாப் பச்சன்: இது பலரும் அறிந்த ரகசியமான காதல் கதை. இன்று வரை பேசப்படும் காதல் கதையும் கூட. அமிதாப் பச்சனுடன் 'தோ அஞ்சானே' படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதல் வயப்பட்டனர். இதையடுத்து பல படங்களில் இருவரும் ஒன்றாக நடித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், ஜெயா பச்சனை திருமணம் செய்து கொண்டார் அமிதாப். அதன் பின்னர், அமிதாபை, ரேகாவுடன் நடிக்க கூடாது என தடை விதித்தாராம் ஜெயா பச்சன்
தொடக்கத்திலேயே முடிந்த திருமண பந்தம்
ரேகா- முகேஷ்: அமிதாப் பச்சனுடன் ஏற்பட்ட காதல் முறிவை தாங்க முடியாத ரேகா, சிறிது காலம் மனஅழுத்தத்தால் இருந்தார் என கூறப்படுகிறது. அப்போது சந்தித்த ஒரு டெல்லி தொழில் அதிபர் முகேஷ் அகர்வாலை காதலித்து மணந்தார். சினிமாவை விட்டு ஒதுங்கி, இல்லத்தரசியாக வாழ நினைத்த ரேகாவிற்கு, தன்னுடைய காதல் கணவனின் தற்கொலை செய்தி இடியாக விழுந்தது. 'காதல் மன்னன்'-ஆக வாழ்ந்த ஜெமினி கணேசனின் மகள் ரேகாவின் காதல்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்தது சற்றே வேதனையான விஷயம்.