Page Loader
திடீரென விஜயகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த GOAT படக்குழு; காரணம் இதுதான்!
விஜயகாந்த் மகன்கள், பிரேமலதா விஜயகாந்துடன் GOAT குழு

திடீரென விஜயகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த GOAT படக்குழு; காரணம் இதுதான்!

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2024
10:13 am

செய்தி முன்னோட்டம்

விஜய் நடிப்பில் GOAT திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்த்-ஐ நடிக்க வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை ஒப்புக்கொண்டார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த நிலையில் நேற்று இரவு, விஜய், வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பேசினர். அப்போது விஜயகாந்த்-ஐ AI மூலம் படத்தில் உருவாக்க அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

விஜயகாந்த் வீட்டில் விஜய்

விஜயகாந்த்

விஜய்யின் வாழ்க்கையில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த்

நடிகர் விஜய் சினிமாவில் கால்பதிக்க போராடி வந்த காலத்தில், அவரின் அப்பா SAC , விஜயகாந்த்-ஐ வைத்து விஜய் உடன் ஒரு படத்தை இயக்கினால், படம் வெற்றி பெறும் என எண்ணி அவரை சந்திக்க வருவதாக கூறினார். ஆனால், விஜயகாந்தோ, அவரே நேரே SAC வீட்டிற்கு சென்றார். விஜயகாந்திடம் SAC இந்த கோரிக்கையை வைத்ததும் 'சம்பளம் கூட பேசவேண்டாம், உடனே படத்தை ரெடி செய்யுங்கள்' என கூறி 'செந்தூரபாண்டி' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் விஜயகாந்த். அன்று முதல், விஜயகாந்த் மீது தனி மரியாதை கொண்டவர் விஜய். கேப்டன் இறந்த செய்தி வந்ததும், GOAT படப்பிடிப்பை நிறுத்தி விட்டு நேரே வந்து அஞ்சலி செலுத்தி, கலங்கி நின்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.