Loading...
"உலகளவில் நெட்ஃபிலிக்ஸை கலக்கும் இந்தியப் படம்!" ரன்வீர் சிங்கின் துரந்தர் சாதனை
நெட்ஃபிலிக்ஸில் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' புதிய சாதனை

"உலகளவில் நெட்ஃபிலிக்ஸை கலக்கும் இந்தியப் படம்!" ரன்வீர் சிங்கின் துரந்தர் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2026
08:07 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நட்சத்திர நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட அதிரடித் திரைப்படமான துரந்தர், திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்ததைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸில் இந்த ஆண்டில் உலகளவில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக துரந்தர் முதலிடத்தைப் பிடித்து இந்திய சினிமா துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது. இயக்குனர் ஆதித்யா தார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு

நெட்ஃபிலிக்ஸ் சிஇஓ டெட் சரண்டோஸ் பாராட்டு

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் இணை முதன்மை செயல் அதிகாரி டெட் சரண்டோஸ் அளித்த பேட்டியில், துரந்தர் திரைப்படத்தின் உலகளாவிய வெற்றியைக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக துரந்தர் உருவெடுத்துள்ளது என்றார்.

இந்தியத் திரைப்படங்கள் சர்வதேச அளவில் தொடர்ச்சியாக மாபெரும் கலாச்சாரத் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், நெட்ஃபிலிக்ஸின் உலகளாவிய டாப் 10 வரிசையில் வாரந்தோறும் ஏதேனும் ஒரு இந்திய திரைப்படம் அல்லது தொடர் தவறாமல் இடம் பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வளர்ச்சி

சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட வளர்ச்சி

இந்திய சினிமா தனது நீண்ட மற்றும் செழிப்பான திரைப்பட வரலாற்றின் காரணமாக உலகளவில் முன்னணி இடத்தைப் பிடித்து வருகிறது.

நெட்ஃபிலிக்ஸ் தளம் வழியாக மட்டும் இந்த ஆண்டில் இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் உலகளவில் 3.5 பில்லியன் மணிநேரத்திற்கும் அதிகமாகப் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளன.

ஆர். மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள துரந்தர் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகிப் பிறகு ஓடிடியில் வெளியானது.

ADVERTISEMENT

இரண்டாம் பாகம்

இரண்டாம்பாகத்தின் ரிலீஸும் ஓடிடி வெற்றிகளும்

துரந்தர் படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இத்திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

உலகளாவிய அளவில் தென் கொரியாவின் ஸ்க்விட் கேம் அல்லது ஸ்பெயினின் மனி ஹெய்ஸ்ட் தொடர்களுக்கு இணையான மிகப்பெரிய ஆதரவை இந்தியத் திரைப்படங்களும் தற்போது பெறத் தொடங்கியுள்ளதற்கு துரந்தர் படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றியே சான்றாக உள்ளது.

ADVERTISEMENT