LOADING...
பாலிவுட்டில் முதல்முறை! ரூ.1500 கோடியை நெருங்கி பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை உடைத்த 'துருந்தர் 2'
'துருந்தர் 2', இந்திய மற்றும் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் புதிய சரித்திரத்தை படைத்துள்ளது

பாலிவுட்டில் முதல்முறை! ரூ.1500 கோடியை நெருங்கி பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை உடைத்த 'துருந்தர் 2'

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2026
01:56 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள 'துருந்தர் 2' திரைப்படம், இந்திய மற்றும் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் புதிய சரித்திரத்தை படைத்துள்ளது. வெளியாகி வெறும் 15 நாட்களிலேயே உலக அளவில் ரூ.1500 கோடி வசூல் என்ற இமாலய இலக்கை எட்டிப் பிடித்துள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இப்படம் இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறது. குறிப்பாக, ஒரு ஹிந்தி திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.1000 கோடி வசூலை நெருங்குவது இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக ரூ.961 கோடி பெற்றுள்ள இப்படம், அடுத்த இரண்டு நாட்களில் 1000 கோடி ரூபாய் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement