Loading...
ராமாயணா பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை: 15 நாட்களில் உலகளவில் ₹1,547.15 கோடி வசூல்
ராமாயணா ₹1,600 கோடி மைல்கல்லை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது

ராமாயணா பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை: 15 நாட்களில் உலகளவில் ₹1,547.15 கோடி வசூல்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2026
10:41 am

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பிரம்மாண்டப் படைப்பான 'ராமாயணா', திரையரங்குகளில் வெளியான 15-வது நாளில் உலகளவில் ₹1,547.15 கோடி வசூலித்து ₹1,600 கோடி மைல்கல்லை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இந்திய சினிமா வரலாற்றில் மிகக் குறுகிய நாட்களில் ₹1,500 கோடி வசூலை கடந்த திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

15-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

15-வது நாள் இந்தியாவில் 21,437 காட்சிகள் மூலம் ₹19.35 கோடி நிகர வசூலையும், வெளிநாடுகளில் ₹5 கோடி வசூலையும் 'ராமாயணா' ஈட்டியுள்ளது.

15-வது நாளில் மட்டும் சுமார் 9,28,188 டிக்கெட்டுகள் விற்பனையானதன் மூலம், ஒட்டுமொத்த டிக்கெட் விற்பனை 3.48 கோடியை தாண்டியுள்ளது.

இந்தியா நிகர வசூல் (Nett): ₹863.75 கோடி (15-வது நாள்: ₹19.35 கோடி)

இந்தியா மொத்த வசூல் (Gross): ₹1,032.15 கோடி

வெளிநாட்டு வசூல்: ₹515 கோடி

உலகளாவிய மொத்த வசூல்: ₹1,547.15 கோடி

முக்கியச் சாதனைகள்

'ராமாயணா' முறியடித்துள்ள முக்கியச் சாதனைகள்

வெறும் 14 நாட்களில் ₹1,500 கோடி கிளப்பில் இணைந்து, துரந்தர் 2 (16 நாட்கள்), புஷ்பா 2 (17 நாட்கள்), பாகுபலி 2 (20 நாட்கள்) மற்றும் தங்கல் (30 நாட்கள்) ஆகிய படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

தமிழ்நாடு (14-வது நாளில் ₹50 கோடியைக் கடந்தது), கர்நாடகா, ஆந்திரா-தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய நான்கு தென் மாநிலங்களிலும் தனித்தனியாக ₹50 கோடிக்கு மேல் மொத்த வசூல் ஈட்டிய முதல் பாலிவுட் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

முதல் 6 நாட்களிலேயே ₹279.80 கோடி நிகர வசூல் ஈட்டி, புஷ்பா 2 (₹264.80 கோடி), பாகுபலி 2 (₹264 கோடி) ஆகிய படங்களின் 7 நாள் வசூலைத் தாண்டியுள்ளது.

ADVERTISEMENT