பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதி
பாலிவுட்டின் பிரபல நடிகையான ராக்கி சாவந்த், கடுமையான இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை படுக்கையில் கிடக்கும் அவரது புகைப்படங்கள் வைரலாகி, அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைகளுக்கு பெயர்போன ராக்கி சாவந்த், படங்கள் மட்டுமின்றி, ஹிந்தி பிக் பாஸ் 14 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள அவரின் இந்த கவலைக்கிடமான நிலைக்கு, ராக்கி சாவந்தின் முன்னாள் கணவர் அடில் கான் துரானி தான் காரணமென, அவரது சகோதரர் ராகேஷ் சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார். டைம்ஸ் நவ்-க்கு அளித்த பேட்டியில், ராக்கி சாவந்தின் பணம் அனைத்தையும் துரானி எடுத்துக் கொண்டதாக ராகேஷ் கூறினார்.
Twitter Post
Rakhi Sawant Hospitalised Due To Serious Heart Problem. #rakhisawant pic.twitter.com/5vCEfnfG1Q— CnewsGroup (@CNewsGroupInd) May 15, 2024