Page Loader
கமல்ஹாசன் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், உருவாகிறது புதிய திரைப்படம்
உருவானது புதிய கூட்டணி; சிம்பு-தேசிங் பெரியசாமி

கமல்ஹாசன் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், உருவாகிறது புதிய திரைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 10, 2023
10:27 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிலம்பரசன்- இயக்குனர் தேசிங் பெரியசாமி இணையும் அடுத்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிக்கப்போவதாக நேற்று (மார்ச் 10) அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் வெற்றிக்கு பிறகு, தேசிங் பெரியசாமி, சிம்புவை இயக்கப்போகிறார் என பல நாட்களாக பேச்சு எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை பற்றி, கமல்ஹாசன், "சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! #STR48" எனக்குறிப்பிட்டு இருந்தார். மறுபுறம், நடிகர் சிம்புவோ, "கனவுகள் நனவாகும் #STR48#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #RKFI56_STR48" என பதிவிட்டிருந்தார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், சிம்புவுடன், அனிருத் இணையப்போகும் முதல் படம் இது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

கமல் தயாரிப்பில் சிம்பு

ட்விட்டர் அஞ்சல்

கமல் ட்வீட்!

ட்விட்டர் அஞ்சல்

சிம்பு ட்வீட்