Page Loader
செல்வராகவனுடன் ஜோடி சேரும் மற்றுமொரு வாரிசு நடிகை
செல்வராகவனுடன் ஜோடி சேரும் மற்றுமொரு வாரிசு நடிகை

செல்வராகவனுடன் ஜோடி சேரும் மற்றுமொரு வாரிசு நடிகை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2023
03:28 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா சினிமாவில் வாரிசு நடிகர்-நடிகைகள் தற்போது படையெடுத்து வருகின்றனர். ஒரு சிலர் திரைக்கு பின்னால் இருக்கும் கலையை நாடினாலும், பெரும்பாலானோர், கேமராவின் முன் நிற்பதையே தேர்வு செய்கிறார்கள். அதற்காக தங்களை தயார் செய்து கொள்ளவும் தயங்குவதில்லை. அதே நேரத்தில், 'வாரிசு' என முத்திரை குத்தப்படுவதாலோ என்னமோ, அவர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அதை முதல் படத்திலேயே பூர்த்தி செய்வது வெகு சிலரே. அதன்படி, தற்போது மற்றுமொரு வாரிசு, திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்போது செல்வராகவனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.

card 2

நாயகியாகும் ராஜிவ் மேனனின் மகள் 

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜு மேனன் மகள் சரஸ்வதி மேனன், ஏற்கனவே ஓரிரு படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் பிரபலமாக வெளியில் அறியப்படவில்லை. இந்நிலையில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், சரஸ்வதி மேனன். இந்த படத்தில், தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தி, சுனில் மற்றும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் ஆகியோரும் நடிக்கின்றனர். ரெங்கநாதன் என்கிற புதுமுக இயக்குனர், இயக்கவுள்ளார் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டு வருகிறது.