
ஜெயிலர் படத்தின் முதல் பாடல், 'காவாலா' வெளியானது
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
இந்த படத்தில், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், ஷிவ் ராஜ்குமார் என நடிகர் பட்டாளமே நடித்து வரும் நிலையில், இன்று இந்த படத்தின் முதல் பாடலான 'காவாலா' வெளியானது.
பாடல் வெளிவரும் முன்னரே, நெல்சனின் தனித்துவமான ஸ்டைலில் வேடிக்கையான ப்ரோமோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
ப்ரோமோ வீடியோவே பல லட்சம் வியூக்கள் பெற்ற நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது.
'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், இம்மாத இறுதியில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
ட்விட்டர் அஞ்சல்
'காவாலா' பாடல்
It’s time to vibe for #Kaavaalaa 💃🏼. Lyric video is out now!💥
— Sun Pictures (@sunpictures) July 6, 2023
▶️ https://t.co/Pd7nBg8h4l@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer #JailerFirstSingle